சிறுவயதிலேயே பிறப்புறுப்பு தைக்கும் கொடூரம்! பாலைவன மலர் “வாரிஸ் டைரி”...(video)

நாலாயிரம் ஆண்டுகாலமாக ஆப்பிரிக்க கலாசாரத்தில் இருந்து வந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியவர் வாரிஸ் டைரி.

1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது
துறுதுறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம்பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.

உடல் முழுவதும் ரத்தம், வலியின்உச்சம், மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.