சண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.

யாழ் பண்டத்தரிப்பில் அண்மையில் காவாலிகள் இருவரால் பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையில் சண்டிலிப்பாய் சந்திக்கு அண்மையிலும்
மாணவி ஒருவர்மீது கொலை முயற்சி காவாலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. குறித்த காவாலி ஹெல்மற் இன்றி மதுபோதையில் காணப்பட்டதுடன் அதிவேகமாக கல்வி நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளான். சம்பவத்தினை கணக்கிலெடுக்காது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான் . இதனால் கல்விநிலையத்திற்கு சென்ற மாணவி படுகாயமடைந்தார்.


     இப்பகுதியில் இரண்டு தனியார் கல்விநிறுவனங்கள் காணப்படுகின்றன இதன்காரணமாக கல்விநிலையம் முடிவடையும் நேரத்திலும் சண்டிலிப்பாய் இந்துக்கல்லாரி முடிடையும் நேரத்திலும் ஹெல்மற் இன்றி மதுபோதையிலும் போதைப்பொருள் பாவித்துவிட்டும்  காவாலிகள் அதிவேகமாக மொட்டார்சைக்கிளை செலுத்தி வித்தை காட்டுவது வழமை. இதனால் பயப்பீதியுடனேயே மாணிவிகள் கல்விகற்கசெல்லுகிறார்கள். இங்கு அலையும் பல மோட்டார்சைக்கிள்கள் பதிவுசெய்யப்படாத சட்டவிரோத மோட்டார்சைக்கிள்களாகும். இவை  கொள்ளை ,வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுபவை.


  இந்தப்பகுதியான கடந்த வருடங்களில் யாழ்மாவட்ட செயலகத்தினால் மாணவர்களுக்கு அதிகம் போதைப்பொருள் விற்பனையாகும்பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டபோதும் செயலகமோ பொலிசாரோ எந்தவித நடவடிக்கiயும் எடுக்கவில்லலை. அத்தடன் கல்வி நிலையங்கள் முடிவடையும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களுக்குள்ளாவது தெரிந்தும் எந்தவித ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையும் நிர்வாக்தால் மேற்கொள்ளப்படுவதில்லை. வருமானத்தினை மட்டும் கருத்திற்கொண்டே இவை செயற்படுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close