Trending News...

ரூம் போட்டு இளம்பெண்னை கொலை செய்த கள்ளக்காதலன்...

தனியார் விடுதியில், கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியவரை, செல்போன் மூலம் 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி அமைந்துள்ளது.

நேற்று காலை இந்த விடுதிக்கு வந்த ஒரு ஆண் மற்றும் பெண் வந்தனர். தங்களுக்கு அறை வேண்டும் என கேட்டனர். அதன்படி அவர்களுக்கு மாடியில் அறை ஒதுக்கப்பட்டது.

அறைக்கு சென்ற அவர்கள், மதியம் 3 ஆகியும் மதிய உணவு குறித்து ஆர்டர் கொடுக்கவில்லை. இதனால், விடுதி ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுபார்த்தனர். உள்பக்கமாக கதவு பூட்டு போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள், விடுதியின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் மாற்று சாவி கொண்டு வந்து, அறை கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள கழிப்பறையில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைகண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.மேலும் போலீசார், அந்த அறையில் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் சென்றதற்கான 40 ரூபாய் பஸ் டிக்கெட்டுகள் 2கிடந்தது. ஓட்டலின் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, ‘‘உமாமகேஸ்வரன், எம்.ஜி.ஆர் நகர், சென்னை-78’’ என்ற முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது. பெண்  பயன்படுத்திய கைப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து போலீசார் பதிவேட்டில் இருந்த செல்போன்எண்ணை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து சிக்னலை ஆய்வு செய்தனர்.

அதில் செல்போன் சிக்னல், கேளம்பாக்கம் தேவனேரி பகுதியை காட்டியதால் உடனடியாக கேளம்பாக்கம், தாழம்பூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.பின்னர், செல்போன் சிக்னல் கோவளம் பகுதியை காட்டியதால் போலீசார், நீலாங்கரைக்கு விரைந்தனர். அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் மடக்கி அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது, கொலையாளி கையும் களவுமாக சிக்கினார்.பிடிப்பட்ட நபரை, மாமல்லபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் கூறியதாவது:-சென்னை கே.கே.நகர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்  சுகுமாரன் (52). அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவிபார்வதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது சுகுமாரன், மனைவியை பிரிந்து பிள்ளைகளுடன் வசிக்கிறார்.சுகுமாறனுடன் வேலை பார்த்தவர்  வசந்தி (45). இவரது கணவர் இறந்துவிட்டார். வசந்திக்கு சூரியா (20), ரஞ்சித்குமார் (18) என்ற மகன்கள் உள்ளனர். சுகுமாரனுக்கும், வசந்திக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், வேறு ஒருவருடன் வசந்திக்கு தொடர்பு  ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சுகுமாரன், வசந்தியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இதனால் வசந்தியை கொலை செய்ய சுகுமாரன் முடிவு செய்தார். இதற்காக கத்தியை வாங்கினார்.

பின்னர், மாமல்லபுரம் சென்று இருவரும், ஜாலியாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, வசந்தியை நேற்று அழைத்து சென்றார். மேற்கண்ட விடுதியில்அறை எடுத்து இருவரும்  தங்கினர். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அதன்பின் வசந்தியை கழிப்பறையில் வைத்து கழுத்தை அறுத்தும், பல இடங்களில் கத்தியால் குத்தியும் படுகொலை செய்த சுகுமாரன், அங்கிருந்து தப்பிவிட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் மதியம் 2.30  மணிக்கு நடந்தது. போலீசாருக்கு 3.30 மணிக்கு தெரிந்தது. மாலை  5.30 மணிக்கு குற்றவாளி சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார், 2 மணி நேரத்தில் குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.