இன்று திருமணம். மாயமான மாப்பிள்ளை பிணமாக மீட்பு.

சென்னை அருகே திருமணத்திற்குதயாராக இருந்த மணமகன் திடீரென மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.சென்னைக்கு அடுத்துள்ள கொளத்தூரில் உள்ள பூம்புகார்நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவியின் பெயர் சாந்தி மற்றும் மகன் பெயர் ராஜேஷ்குமார் .இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவரது பெயர் ஸ்ரீலேகா . இவரது மகன் ராஜேஷ்குமார் முகப்பேரில் கிளினிக் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது தந்தையும் கிளினிக்கை பார்த்துகொள்கிறார்..தனது ஒரே ஆசை மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நாகராஜன் காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளை செய்துவிட்டு நாஜ்கராஜனும் அவரது மனைவியும் உறவினர்களை திருமணத்திற்கு அழைக்க சென்றனர்.அந்த நேரத்தில் ராஜேஷ்குமார் மற்றும் அவரது தங்கை மட்டுமே வீட்டில் இருந்தனர்.கடந்த மாதம் 28 தேதி திடீரென ராஜேஷ்குமார் மாயமானார். இதனால் பதரிய தங்கை பெற்றோருக்கு இந்த தகவலை தெரிவித்தார். இந்த விவரம் அறிந்து சென்னைக்கு ரஜேஷ்குமாரின் பெற்றோர் வந்தனர்.ராஜேஷ்குமார் செல்லும் எல்லாஇடங்களுக்கும் சென்று விசாரித்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை .இதுபற்றி கொளத்தூர் போலீசில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், கொளத்தூர் பூம்புகார் நகர் அருகே உள்ள சென்னை குடிநீர் தொட்டியிலிருந்து நாற்றம் விசியுள்ளது.அண்ணா நகரின் துணை கமிஷனர் சுதாகர் மற்றும் அவரது குழுவினர் பொக்லைன் உதவியால் தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்தனர். அந்த தண்ணீர் தொட்டிக்குள் இறந்த உடல் மிதந்து கிடந்தது. அந்த உடல் ராஜேஷ்குமார்தான் என்று உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.அதற்குபின்பு அவரின் உடல் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. ராஜேஷ்குமாரையார் கொன்றார்.?அவரது கொலைக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? தற்கொலை இல்லை என்றால் திட்டமிட்டு பழிவாங்கும் முயற்சியா?அவரின் திருமணம் ஜூலை 3 ஆம் தேதியில் நிச்சயிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்திற்கும் தொடர்புஇருக்குமா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.