Trending News...

கீரிமலை கடலில் சுழியில் சிக்கி சிறுவன் பலி.

கீரிமலைக் கடலில் நீந்திக் கொண்டிருந்த  16 வயது மதிக்கத்தக்க சிறுவன் சுழியில் சிக்கி பலியானான். நேற்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலரும் கரையில் பார்த்துக் கொண்டிருந்த போது கடலில் மிக ஆழமான இடத்துக்கு குறித்த சிறுவன் நீந்திச்  சென்றதாகவும் அதன் பின்ன அவன் காணாமல் போனதாகவும் தெரியவருகின்றது. பின்னர் இடம் பெற்ற தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவலகள் தெரிவிக்கின்றன.