லண்டனில் நூற்றுக்கணக்கான 13 வயதுப் பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்த பெரும் கூட்டம்: தமிழர் தொடர்பா ?

பிரித்தானியாவில் நியூகாசில் என்னும் நகரில், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மாபெரும் குற்றச் செயல் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். சுமார் 18 ஆசிய இனத்தவர்கள் சம்பந்தப்பட்ட இந்த குழுவில்ஒரு பெண் மற்றும் பிரபா என்னும் தமிழ் நபரும் அடங்குவதாக அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார். நியூகாசில் நகரில் சில்லறைக்கடைகளை வைத்திருக்கும் சில ஆசிய நபர்கள், சிறுமிகளுக்கு கஞ்சாவையும், பியர் போன்ற மதுபாணங்களையும் கொடுத்து அவர்களை போதைப் பழக்கத்திற்கு முதாலில் அடிமையாக்கி விடுகிறார்கள்.பின்னர் அவர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றி, ஒரு முறை உறவுகொள்ள 15 பவுண்டுகள் என்று கூறி அதனை வியாபாரமாக்கி. தமது நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களை குறித்த சிறுமியோடு உறவு வைத்துக்கொள்ள அனுப்புவது வழக்கம். இவ்வாறு பல ஆண்களாக நடைபெற்று வந்த நிலையில். இவர்கள் சுமார் நூற்றுக்கணக்கான சிறுமிகளை இவ்வாறு பாவித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.இவர்களது பிடியில் இருந்த 13 வயதுச் சிறுமி ஒருவர் கர்பம் தரித்து. அதனைக் கலைக்க அவர் வைத்தியசாலை சென்றவேளையே இந்த விடையம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் எலிப் பொறி வைப்பது போல வேறு பல சிறுமிகளை அவர்கள் இருக்கும்இடங்களுக்கு அனுப்பி. முதலில் அவர்களை வலையில் வீழ்த்தி பின்னர் அவர்களை பின் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களையும் கைதுசெய்துள்ளார்கள். இவர்கள் அனைவரது குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவர்கள் தற்பொது நீதிமன்றத்தால் தண்டனை பெற காத்திருப்பதாக மேலும் அறியப்படுகிறது.