Trending News...

வாகன விபத்தில் 14 வயது சிறுமி பலி (படங்கள்)

குருணாகலை தம்புள்ளை வீதியின் கலேவெல பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக கலேவெல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டிபர் ரக வாகனமொன்றும் உந்துருளியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பயணித்த கலாவெவ புல்நேவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார்.

உந்துருளியை செலுத்தி வந்த அவரின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டிபர் ரக வாகனத்தின் சாரதி கலேவெல காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,  கலேவெல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.