Trending News...

காதலால் நடந்த கொடூரம் - 15 வயது மாணவியின் கை துண்டாக வெட்டிய இளைஞர்!!

 உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த  ஷிவானி மிஸ்ரா என்ற 15 வயது மாணவி தனது சகோதரனுடன் அங்குள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த வினோத் சவுராசியா  என்ற வாலிபர் அவரிடம் பேச முயற்சித்துள்ளார்.

ஆனால் ஷிவானி மறுத்தவுடன், கத்தியை வைத்து தாக்கியுள்ளார். இதனால் அப்பெண்ணின் கை துண்டாகியதால் இரத்த வெள்ளத்தில் வலியில் துடித்துள்ளார்.

இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்த உடனடியாக அவனை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்குள்ளான மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு11 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது கை மீண்டும் பொருத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

மாணவியை தாக்கிய வினோத்  பல மாதங்களாக அத சிறுமியை பின் தொடர்ந்து வந்ததாகவும், கடந்த புதன்கிழமை அவரை சந்தையில் பார்த்ததால், அவரிடம் பேச முயற்சி செய்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததால்   ஆத்திரத்தில் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.