Trending News...

புகையிரத பெட்டிகள் தடம் புரண்டதில் 23பேர் பலி

வட இந்தியாவில் ஆறு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 23பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறைந்த பட்சம் 81பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன .

இரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி உள்ளதாகவும் , இன்னும் நான்கு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி விட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
(post-ads)
ஒரிஸ்ஸா மாவட்டத்தின் , பூரி என்ற பட்டினத்தில் இந்துக்களின் புனித கோவில் ஒன்றை இணைக்கும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலே இப்படியொரு விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது . காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் ஒடிஸ்ஸா அமைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.