Trending News...

டிரெம்பின் ஒரு ட்வீட்டால் 38 ஆயிரம் கோடி ரூபாயை இழந்த அமேசான் நிறுவனம் !!

முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமாக அமேசான் வர்த்தக ரீதியில் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் உடன் போட்டி போடும் அளவிற்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு அமேசான் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அமேசான் நிறுவனத்தால் வரி செலுத்தும் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனங்களின் வியாபாரத்தை அமேசான் நிறுவனம் முடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரெம்பின் இந்த ட்வீட்டால் அமேசான் நிறுவனத்தின் 5.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்புள்ள பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.