Loading... Please Wait.

4,5 வயதான இரு சிறுமிகளுக்கு தந்தையால் ஏற்பட்ட கொடூரம்...!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில் இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில்  அச் சிறுமிகளின் தந்தையை காத்தான்குடி பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

குறித்த 4 மற்றும் 5 வயதான சிறுமிகளின் தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறுமிகள் இருவரும் தங்களது தந்தையினால் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தாயிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 அந்த சிறுமிகள் இருவரும் தமக்கு நடந்த சம்பவத்தை காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

 இந்த சம்பவம் தொடர்பில் உரிய இடத்திற்கு சென்று விசாரணைகளை செய்துள்ள காத்தான்குடி பொலிஸார் சிறுமிகளின் தந்தையான  என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமிகள் இருவரையும்  வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனையை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
close