Trending News...

சிறுமியை சீரழித்த 50 பேர் கொண்ட விபச்சார கும்பல்... தொலைக்காட்சி நடிகர்களுக்கும் தொடர்பு!!

திருவனந்தபுரம் அருகே மலையின்கீழ் குத்திக்காடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி விழிம்பில்சாலா போலீசில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார்.

அந்த புகாரில் விழிம்பில் சாலா பகுதியை சேர்ந்த விஷ்ணுசாகர் (வயது 28) என்ற வாலிபர் தன்னை காதலித்தாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பலமுறை கற்பழித்ததால் தற்போது தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் ஆனால் தன்னை அவர் திருமணம் செய்ய மறுப்பதாக வும் கூறியிருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுசாகரை கைது செய்தனர். அவரிடம் போலீ சார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கற்பழிப்பு புகார் கூறிய சிறுமி விபசார கும்பலிடம் சிக்கி சீரழிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2Ñ வருடத்தில் அவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதும்  தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்.

குத்திக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகலா (40) என்ற பெண் அந்த சிறுமியின் வறுமையை பயன்படுத்தி பண ஆசை காட்டி அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அவருக்கு உடந்தையாக ஷாஜிதாபீவி (45). ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன் (64), சுரேஷ் (24) ஆகியோரும் செயல்பட்டு உள்ளனர்.

ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன், சுரேஷ் ஆகியோர் அந்த சிறுமியை விபச்சாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது ஆட்டோவில் வைத்தே சிறுமியை ஆட்டோ டிரைவர்களும் தங்கள் ஆசைக்கு இரையாக்கி உள்ளனர்.

இந்த நிலையில் விஷ்ணு சாகரும் விபச்சாரத்திற்காக அந்த சிறுமியை தேடிச் சென்றுள்ளார். அதன்பிறகு பலமுறை அவர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த தால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த சிறுமி கர்ப்பிணியானதால் அவரை விஷ்ணுசாகர் தலையில் கட்ட அந்த கும்பல் முடிவு செய்தது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காதால் பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபச்சார கும்பலை சேர்ந்த ஸ்ரீகலா, ஷாஜிதாபீவி, சதாசிவன், சுரேஷ் ஆகியோரை கைது செய் தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமியை சீரழித்தவர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. கேரள டி.வி. நடிகர்கள் சிலரும் அந்த சிறுமியை கற்பழித்து உள்ள தகவலும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.