6 அடி நீளமுள்ள புலிக்கொடி முள்ளிவாய்க்காலில்...

முள்ளிவாய்கால் – நந்திக்கடல் பகுதியில் 6 அடி நீளமுள்ள புலிக்கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இவ்வாறான புலிக்கொடிகளை மாவீரர் அஞ்சலி நிகழ்வுகளில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
(post-ads)
விடுதலைப் புலிகளின் காலத்தில் சமர்க்களத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு பொது அஞ்சலி செலுத்தப்படும் போது இவ்வாறான புலிக்கொடிகளை பொது மண்டபங்களில் சாத்தி பொதுமக்கள் வித்துடல்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு உதவியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மேலும், எட்டு வருடங்களின் பின்னர் குறித்த கொடி முள்ளிவாய்க்காலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close