குளத்தில் விழுந்து இரு இளம்பெண்கள் தற்கொலை...

ஆரணியை அடுத்த பையூரில் குட்டையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இரு மாணவிகளில் ஒருவரது உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.

ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி சரண்யா (17), 7- ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி (12). இவர்கள் இருவரும் பையூர் எம்ஜிஆர் நகர் பாறை குட்டை குளத்தில் விழுந்து தற்கொலை செயது கொண்டனர்.

இதில் சிறுமி தர்ஷினியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் சரண்யாவின் உடலை தேடும்பணி நடைபெற்று வருகிறது.இவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், ஆரணி கிராமிய காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.