யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதி படுகாயம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலைக்கு அருகில் நீர்த்தாங்கிக்கு முன்னால் இன்று (01.08.17) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் காயங்களுக்குள்ளானார்.

பிரதான வீதியால் வந்த முச்சக்கர வண்டியும் குறுக்கு வீதியால் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட இளம் பெண் வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே  விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயப்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.