Trending News...

வவுனியா: கிணற்றிலிருந்து ஜந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா சாம்பல் தோட்டத்தில் இன்று (20.08.2017) காலை 11.30மணியளவில் ஜந்து பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஜந்து பிள்ளைகளின் தாயான தியாகராசா நகுலேஸ்வரி (வயது – 46) என்பவர் இன்று மதியமளவில் கிணற்றிக்கு அருகே நின்றுள்ளார் .
(post-ads)
பின்னர் அவரை காணவில்லை  என அவரின் பிள்ளைகள் தேடிய சமயத்தில் கிணற்றிலிருந்து சடலமாக இருந்துள்ளார்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டேடுத்து தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த நபரின் மகளிடம் வினாவிய போது, தாயார் சற்று மனநலம் பாதிப்படைந்தவர் என தெரிவித்தார்.