Loading... Please Wait.

யாழ் ஆரியகுளம் சந்தியில் ட்ராக்டர் கவிழ்ந்து விபத்து...

யாழ் நகரில் உள்ள அரியகுளம் சந்தியில் மணல் ஏற்றி வந்த ட்ராக்டர் திடீரெனக் கவிழ்ந்ததில் அதன் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் மணல் ஏற்றிய நிலையில் வேகமாக வந்து திருப்ப முயன்ற நிலையிலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
close