Trending News...

யாழில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து ஒருவர் மரணம்.

யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் ஆசிரியையும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான மீரா ஆசிரியையின் கணவர் அருள்நேசன் இன்று காலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

பிரபல ஆசிரியர் மீரா, கணவர் அருள்நேசன் மற்றும் மகள் கொழும்பில் இருந்து இன்று அதிகாலை யாழ் வரும் ரயிலில் பயணித்தனர்.

அரியாலையில் அவர்களின் வீடு உள்ளதால், புங்குள ரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கத் தயாராகினர்.
வழமைக்கு மாறாக நேரத்துடன் 5.00 மணிக்கு வந்த ரயில் நிலையத்தில் நிற்பதற்காக வேகத்தை குறைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் விதி, ரயில் நிற்கும் முன்னரேயே அவர் ஒரு கையில் பெரிய பயணப் பொதியும் மறுகையில் தண்ணீர் போத்தலுடன் இறங்கிய வேளை தவறி விழுந்ததால், ரயில் தண்டவாளத்தில் விழுந்து ரயில் சில்லு ஏறி இறந்து போனார்.