Trending News...

பாடசாலை சிறுமிகளை வைத்து விபச்சாரம்...

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகளை விபச்சார தொழிலில்ஈடுபடுத்தும் இரகசிய மோசடி வியாபாரமொன்று கம்பஹா - தொம்பே பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெறுவதாக ஹரு சிஐஏக்கு இரகசிய தகவல் கிடைத்தது.பல நாட்களாக குறித்த பகுதியில் நோட்டமிட்ட எமது ஹரு சிஐஏ குழுவினர் இந்த மோசடி வியாபாரம் தொடர்பில் தகவல்களை சேகரித்தனர்.அதன்படி , சிறுமிகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தும் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்ட எமது குழுவினர் தொலைப்பேசி அழைப்பின் மூலம் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர்.சிறுமிகளை பார்வையிடுவதற்காக குறித்த மோசடியாளர்கள் எம்மை மல்வானைபிரதேசத்திற்கு அழைத்தனர்.அதன்படி , பாணந்துறை வலான ஊழல்தடுப்பு பிரிவின் உதவி காவற்துறை கண்காணிப்பாளர் ஹெமல் பிரசாந்தவின் தலைமையில் இந்த மோசடி வியாபாரம் சுற்றிவளைக்கப்பட்டது.