Trending News...

கஞ்சா போதையில் பாட்டியை அடித்து நொருக்கினான் யாழ் பல்கலைக்கழக மாணவன்

கஞ்சாவுக்கு அடிமையான யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவன் ஒருவன் வைமன் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டை அடித்து நொருக்கியதுடன் 80 வயதான தனது பாட்டியையும் கடுமையாகத் தாக்கியுள்ளான்.

 அத்துடன் இவன் ஊடகவியல் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவன் தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளான் எனவும் இன்று அதி உச்ச கட்டமாக தனது பாட்டியையும் கொலை செய்ய முயற்சித்தான் எனவும் தெரியவருகின்றது. தற்போது இவனது தாய் மற்றும் உறவினர்கள் யாழ் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

இவனைப் பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவனது கற்றல் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டில் உள்ள இவனது சொந்தங்களே நிதி உதவி வழங்கி வந்ததாகவும் அந்த நிதியை வைத்தே இவன் கஞ்சாவுக்கு அடிமையாகியதாகவும் வெளிநாட்டில் உள்ள இவனது நெருங்கிய உறவுகள் தெரிவித்துள்ளனர். இவனது புகைப்படங்கள் எம்மிடம் உள்ளது. சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவற்றையும் பிரசுரிக்கத் தயங்கமாட்டோம்.