Trending News...

தியேட்டர் பால்கனியில் வைத்து கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி...

‘பேஸ்புக்‘ மூலம் காதலித்த கல்லூரி மாணவியை, தூத்துக்குடி தியேட்டர் பால்கனிக்கு அழைத்து சென்று வாலிபர் கற்பழித்தார். சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறிய அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘பேஸ்புக்‘ மூலம் மலர்ந்த காதல்

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ஒரு இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ(26) என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்‘(முகநூல்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 3 மாதமாக காதலித்து வந்தனர்.

இதற்கிடையே ஊருக்கு சென்ற அந்த மாணவி, தன்னை சிலர் கடத்திச்சென்று கற்பழித்ததாக கூறி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
திடுக்கிடும் தகவல்கள்

இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–

கடந்த வாரம் அந்த மாணவி கல்லூரி விடுமுறை நாளில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றார். அங்கு தன்னுடைய ‘பேஸ்புக்‘ காதலன் ஜோவை சந்தித்து பேசினார். விடுமுறை முடிந்து தூத்துக்குடிக்கு வரும்போது, மாணவி தன்னுடைய காதலனையும் தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் ஜாலியாக சுற்றி திரிந்தனர்.
தியேட்டரில் கற்பழிப்பு

பின்னர் சினிமா பார்க்கலாம் என்று அந்த மாணவியிடம் ஜோ கூறினார். அதற்கு அந்த மாணவியும் சம்மதம் தெரிவித்தார். இருவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றனர். அங்கு பால்கனியில் அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில் இருவரும் டிக்கெட் எடுத்தனர்.

ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது.
வழக்குப்பதிவு

மேலும் காதலன் கூறியதன் பேரில் அந்த மாணவி தன்னை சிலர் கடத்திச் கற்பழித்ததாக போலீசில் புகார் கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மத்தியபாகம் போலீசார், ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக ஜோ மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.