Trending News...

யாழில் மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம்...

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். யாழ் கொக்குவில் பகுதியில் வசிக்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவர்க.பொ.த சா.த தரத்தில் தன்னிடம் கல்வி பயின்று,  தற்போது பல்கலைக்கழகத்தில்படித்து வரும் மாணவியுடன் கள்ளக் காதல் கொண்டிருந்ததாகவும் இது மனைவிக்கு தெரிய வந்து குடும்பத்தில் பெரும் குழப்பம் நிலவியதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவியின் வீட்டுக்கு மனைவி சென்று மாணவியின் தாயாரை நேற்று முன்தினம் தாக்கியுள்ளார். இச் சம்பவம் பொலிஸ் விசாரணையில் உள்ளது. இந் நிலையிலேயே மாணவியும் ஆசிரியரும் தலைமறைவாகியுள்ளனர். நேற்று மாலையிலிருந்து கணவரைக் காணவில்லை என மனைவி தெரிவித்துள்ளார். இதே வேளை கணவன் தனது வைபரில் இருந்து மனைவியின் வைபருக்கு குறித்த மாணவியுடன் தங்கியிருப்பதை புகைப்படம்பிடித்து அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.இது தொடர்பாக மனைவி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளார். தனது 30 பவுண் நகையையும் கணவன் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.