Loading... Please Wait.

வேற்றுகிரகவாசிகளா? அல்லது ஆவியா? அல்லது அமானுஸ்யமா?...

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் இலங்கையில் கூட பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பலர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையின் தெற்கு வட மத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் பலர் பார்த்தாக தெரிவிக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு பொலநறுவையில் நீல கோளவடிவமான உருவம் ஒன்று தென்பட்டுள்ளது. இது பொலநறுவை மகாவௌ பிரதேச வான்பரப்பில் தென்பட்டதாக கூறப்படுகின்றது.இதனை ஆசிரியர் ஒருவரும் 3 மாணவர்களும் கண்டுள்ளனர்.
(post-ads)
பாடசாலையின் அருகே தரையிறங்கிய நிலையில் அதிலிருந்து மனித உருக்கொண்ட அங்கியொன்று வெளியாகியதாக கூறியுள்ளனர்.

1998 பண்டராவளையில் பாரிய இறுவெட்டு வடிவிலான தட்டு ஒன்று தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.சிவப்பு மஞ்சள் ஒளியை சிமிட்டியவாறு குறித்த இறுவெட்டு தரையிங்கியுள்ளது.

பாடசாலை ஒன்றில் தரையிங்கியதாகவும் இதனை 8 மற்றம் 10 வயதுடைய இரு மாணவர்கள் கண்டுள்ளனர்.அதே உருவத்தை பல கிராமவாசிகளும் கண்டுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு பொலநறுவையில் பல வண்ண ஒளிகளை சிமிட்டும் கோளவடிவமான பல பொருட்கள் வானில் பறந்து சென்றுள்ளன.

2006 ஆம் ஆண்டு தனமல்வில் மனிதர்களை போன்று தோற்றம் உள்ள இரண்டு அடி உயரமான கறுப்பு உருவங்களை 50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர்.

2017 ஜனவரி இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, காலி, மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இனந்தெரியாத பொருட்கள் தென்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் அடிப்படையில் இவை வேற்றுகிரகவாசிகளா? அல்லது ஆவியா? அல்லது அமானுஸ்யமா? என்ற சந்தேகம் எழுகின்றது.
close