Trending News...

பிஞ்சு குழந்தையை வீதியில் தூக்கியெறிந்த இளம்பெண்...

தாயாக இருக்க விருப்பமில்லை என்பதால் பிறந்த குழந்தையை சாலையில் அனாதையாக விட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Texas-ல் வசித்து வருபவர் Sidney Woytasczyk (21) கல்லூரி மாணவியான இவர் பகுதி நேர வேலையும் செய்து வருகிறார்.

Sidney கர்ப்பமாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் சமையலறையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
(post-ads)
இதையடுத்து குழந்தையை நடுஇரவில் வீட்டின் வெளியில் எடுத்த வந்த Sidney இரக்கமின்றி சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

ஆறு மணி நேரம் வெறும் உடலோடு சாலையில் இருந்த குழந்தையை எறும்புகள் அதிகமாக கடித்துள்ளது.

அந்தவழியாக சென்ற Albert Peterson என்ற நபர் குழந்தையை மீட்டு பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தை அடுத்து பொலிசார் Sidney-ஐ கைது செய்தனர். நடந்தவற்றை எல்லாம் பொலிசாரிடம் கூறிய Sidney கர்ப்பமாக இருப்பது தனக்கே தெரியாது என கூறியுள்ளார்.

குழந்தை பிறந்த விடயம் தனது காதலர் Deandre Skillern-க்கு தெரிந்தால் அவர் பீதியடைவார் என்பதாலும், தனக்கு தாயாக இருக்க விருப்பமில்லாததாலும் குழந்தையை சாலையில் விட்டதாக Sidney வாக்குமூலம் அளித்துள்ளார்.