யாழ் கந்தர்மடத்தில் கோர விபத்து!!

சற்று முன்னர் யாழ். கந்தர்மடம், ஆத்திசூடிப் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிர் தப்பினார்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் கார் ஒன்று  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள ஆத்திச்சூடி விநாயகர் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையிலேயே இவ்விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை சமநேரத்தில் கடப்பதற்கு எதிரெதிர் தரப்பில் கார் ஒன்றும் முச்சக்ரவண்டியொன்றும் முயற்சித்துள்ளது அச்சமயம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கி புறப்பட்ட விசேட அதிசொகுசு புகையிரதம் குறித்த கடவையை நெருங்கியுள்ளது.

எனவே முச்சக்கரவண்டியை அதன் சாரதி பின்புறமாக இயக்கியதுடன் காரிலிருந்த பெண் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து சடுயாக வெளியேறினார்.

இதனால் கார் புகையிரதத்துடன் மோதுண்டு சுக்குநூறானது எனினும் அதிஸ்ரவசமாக காரை செலுத்திய மருத்துவரான குறித்த பெண்மணி சிறு காயங்கள் கூட ஏற்பாடாமல் தப்பித்தார்.

குறித்த புகையிரதக்கடவை பாதுகாப்பற்றது என்ற போதிலும் கடமையிலிருந்த புகையிரத ஊழியர் அதன் தடையை  அடைத்திருந்தால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்காது என விபத்தை அவதானித்த மக்கள் தெரிவித்தனர்.

எனினும் காரை முன்னுக்கு செலுத்தாமல் பின்னால் செலுத்துமாறு தான் கூறியதாகவும் ஆனால் குறித்த கார் உரிய நேரத்தில் இயங்குநிலைக்கு வரவில்லை என்பதால் இவ்விபத்து ஏற்ப்பட்டதாக அந்த புகையிரத ஊழியர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.

தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.