வீதியில் கணவரை அடித்து நிர்வாணமாக ஓட விட்ட மனைவியும் காதலியும்!!!!

சீனாவில் ஏமாற்றிய கணவரை மனைவியும், காதலியும் சேர்ந்து நடுரோட்டில் அடித்து நிர்வாணமாக்கி ஓட விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், கருப்பு, பச்சை ஆடை அணிந்த இரண்டு பெண்கள் ஆண் ஒருவரை சரமாரியாக அடித்து நிர்வாணமாக்கி ஓட விடுகின்றனர்.

சம்பவயிடத்திலிருக்கும் சிறுவர்கள் இதை பார்த்து சிரித்து ரசிக்க, அங்கிருந்த நபர் ஒருவர் இதை தனது போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இதில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் பெண் அந்நபரின் மனைவி என்றும், பச்சை ஆடை அணிந்திருக்கும் பெண் காதலி எனவும் கூறப்படுகிறது.

அந்த நபர் இரு பெண்களையும் ஏமாற்றி ரகசியமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

இதனால் கோபமடைந்த காதலியும், மனைவியும் சேர்ந்து அவரை அடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். தற்போது, குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.