Loading... Please Wait.

14 வயதான பாடசாலை மாணவி மாயம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா, மஹாரம்பைக்குளம் பகுதியில் 14 வயதான பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற நிலையில், குறித்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

close