Loading... Please Wait.

பள்ளி கழிவறையில் 7 வயது மாணவனை கொன்றது ஏன்? கொலையாளி திடுக்கிடும் தகவல்!!!

பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது சத்தம் போட்டதால் 7 வயது பள்ளி மாணவனை கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

டில்லியை அடுத்த குர்கானில் ரியான் சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு ப்ரதுமன் தாகூர்(வயது 7) என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளிக் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ப்ரதுமன் ரத்த வெள்ளத்துடன் கிடந்தார்.

இதை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியருக்கு தகவல் அளித்துள்ளனர், உடனடியாக பொலிசுக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த அதிகாரிகள் ப்ரதுமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ப்ரதுமன் உயிரிழந்ததாக தெரிகிறது, இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் மாணவன் இறந்து கிடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கில் பள்ளி பேருந்து நடத்துனரின் உதவியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர், சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது சத்தம் போட்டதால் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

close