கள்ளக்காதலிக்காக குடும்பத்தினரை பூட்டி வைத்து தீ மூட்டிய கொடூரம்!!!
தனது மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் வீட்டின் அறை ஒன்றினுள் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு தீயிட்டு கொலை செய்ய முயற்சித்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரை கள்ளக் காதலியின் வீட்டில் மறைந்திருந்த போது அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் விஜயபுர சூலனி மாவத்தையில் வசித்துவரும் முச்சக்கரவண்டி சாரதியான சந்தேகநபர், வீட்டுக்குத் தீ வைத்ததன் பின்னர் அநுராதபுரம் 3 ஆவது ஒழுங்கையில் அமைந் துள்ள தனது கள்ளக் காதலியின் வீட்டிகற்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட காலமாக பெண் ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பை பேணி வந்திருந்ததன் காரணமாக அவரது சட்டபூர்வமான மனைவியுன் சண்டையிட்டு அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த இச்சந்தேகநபர் தனது மனைவியை தாக்கியதுடன் 9, 4 வயது மற்றும் ஒன்றரை வயதான கைக்குழந்தை ஆகியோரையும் கண்மூடித்தனமாக தாக்கி அவர்களை வீட்டின் அறை ஒன்றுக்கு அடைத்துவைத்து வீட்டுக்கு தீயிட்டுச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வீடு தீப்பற்றி எரிந்ததன் காரணமாக சந்தேக நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கூச்சலிட்டுள்ள நிலையில், அங்கு சென்று அறையின் கதவை உடைத்து நால்வரையும் வீட்டுக்குள்ளிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
எனினும் வீட்டினுள் இருந்த ஆடைகள் மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளை யின் கற்றல் உபகரணங்கள் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகியிருந்தன.
அத்துடன் சந்தேகநபரின் தாய் தனது மகனின் குடும்பம் வசிப்பதற்கு தன்னுடைய வீட்டுடன் இணைந்தவாறு பிரத்தியேகமானதொரு அறையை நிர்மாணித்துக் கொடுத்துள்ள நிலையில் அப்பகுதி தீயினால் முழுமையாக நாசமடைந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது தான் வீட்டுக்கு சென்று சிகரெட் ஒன்றை பற்றவைத்து தீக்குச்சியை வீசியபோது அது வீட்டிலிருந்த உடைகளின் மேல் வீழ்ந்ததில் தீ பரவியதாக வாக்கு மூலம அளித்துள்ளார்.
அத்துடன் தான் எவரையும் தாக்கி வீட்டில் அடைத்து கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்றும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேக நபர் நேற்று முன்தினம் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.