மனைவி குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த கொடூர கணவன்!

தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற பின் கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தின் உள்ள கே.ஆர்.நகர் தாலுகா சதனஹள்ளி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மனைவி குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த கொடூர கணவன்!

குறித்த கிராமத்தை சேர்ந்த மது என்பவரது வீட்டில் வெகுநாட்களாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பத்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இன்று(17) கால்வாயில் தள்ளி கொன்றுள்ளார்.

பின்னர் கே.ஆர்.நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய அவரின் மனைவியான அனுஷா 6 வயதுடைய மகள் பூர்விகா மற்றும் 2 வயதுடைய மகள் லிகித்தா ஆகியோர் இறந்துள்ளனர்.

இது குறித்து மது மீது பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார் பூர்விகாவின் உடலை மீட்டனர்.

மற்ற இருவரின் உடலை தேடும் பணியில் பொலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close