Trending News...

மகனை கொலை செய்த தாய் கைது

தனது மகனை கொலை செய்த தாயை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.

தனது 6 வயதான மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 18 வயதான மகனை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு அவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சகோதரனால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுபடுத்தப்பட்டதாக 6 வயதான மகள் அவரின் தாயிடம் கூறியுள்ள நிலையில், தாய் கடுமையாக கோபமடைந்து தனது சகோதரரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளார்.

சகோதரனின் உதவியுடன் தனது மகனை காட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல ஆயத்தமான போது சகோதரன் மற்றும் மகனுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அந்த பெண் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்து கொண்ட காவல்துறையினர் கடந்த 25 ஆம் திகதி சந்தேக நபரான தாயை கைது செய்துள்ளனர்.

இரண்டு மனித கொலைகள் செய்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகனை முன்னெடுத்துள்ளனர்.