Loading... Please Wait.

வவுனியாவில் நபரொருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..

வவுனியா - ஓமந்தை - கிளவிக்குழம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கிழவிக்குழம் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இரவு ஏற்பட்ட முறுகல் நிலை, அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கும், விவாகரத்தான தனது மனைவி மற்றும் அவரின் உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், மனைவியின் உறவினர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என ஓமந்தை காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் அவரது தந்தையும், இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தை காவல்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
close