பொலிஸாரையே கலங்கடித்த மாணவி... அப்படி என்ன செய்தார் தெரியுமா?.

குறுக்கு வீதியொன்றில் முச்சக்கரவண்டியில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, தன்னிடமிருந்த தங்க சங்கிலி மற்றும் மேலும் சில பொருட்களை திருடி சென்றதாக பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்ட பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுகமயில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்டதாக மாணவி கூறிய தங்கசங்கிலி, கையடக்க தொலைபேசி மற்றும் வயலினையும் காவல்துறை கைப்பறியுள்ளது.

மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது குறித்த மாணவி கடத்தப்பட்டதாக தொடங்கொட காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்பகட்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் தினத்திற்கு மூன்று நாட்கள் பிறகே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தம்மை கடத்தியவர்கள் தனக்கு தெரியாத இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி செயல்பட்ட காவல்துறை அந்த மாணவி காட்டிய குறுக்கு வீதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கெமராவின் காட்சிகளை பரிசோதனை செய்துள்ளது.

எனினும் மாணவி கூறிய எந்தவொரு விடயமும் அதில் பதிவாகவில்லை. இதனால் காவல்துறையால் அந்த மாணவியின் நெருங்கிய நண்பிகள் சிலரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அன்றைய தினத்தில் எந்தவொரு கடத்தலோ அல்லது மேலதிக வகுப்போ இடம்பெறவில்லை எனவும், அவர் தனது காதலருடன் பயாகல கடற்கரை மற்றும் மேலும் சில இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது திருடப்பட்டதாக கூறப்பட்ட வயலின் அந்த மாணவியின் நண்பியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, காதலரின் உறவினர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், தங்கசங்கிலி மாணவியின் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, காதலருடன் சென்ற பயணத்தை வீட்டில் மறைப்பதற்காக இந்த முறைப்பாட்டை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் காவல்துறைக்கு பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close