குழந்தையை ஜன்னல் வழி வீசி கொன்ற கொடூர தாய்!!!

இங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு கிரவுன் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் கர்ப்பம் அடைந்தாள். அதை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்து வந்தாள்.

இந்த நிலையில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அது பிறந்தவுடன் பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீட்டுக்கு வெளியே வீசினாள். அதனால் அக்குழந்தை இறந்தது.

எனவே அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையின் தந்தை தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனவே அக்குழந்தை தனக்கு தேவையில்லை என்றாள்.

இந்த வழக்கு ஸ்டாப்போர்டு கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் சேம்ஸன் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close