Loading... Please Wait.

வல்வெட்டிதுறை கடலில் மாயமான மீனவர்!! நடந்து என்ன?

யாழ். வல்வெட்டிதுறை கடலில் நேற்றை தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் இன்று வரை , கரை சேராததை அடுத்து 10ற்க்கும் மேற்பட்ட படகுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன.

வல்வெட்டித்துறை கொண்டை கட்டை பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான வடிவேலு சிறீகாந் வயது 48 என்ற மீனவர் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் வல்வெட்டிதுறை கடல் பரப்பில் தூண்டில் தொழில் மேற்கொள்ள ஒரு படகில் தனியாகச் சென்றுள்ளார்.

வழமைபோல் மாலை 6 மணியளவில் கரை சேரும் இவர் நேற்றைய தினம் திரும்பி வராத காரணத்தால் உடனடியாக இரண்டு படகுகளில் ஏனைய மீனவர்கள் அவரைத் தேடி சென்றுள்ளனர்.

அவர் சென்றிருந்த பகுதியில் அவரை காணாததினால் இன்றைய தினம் காலை 10 ற்க்கும் மேற்ப்பட்ட படகுகளில் குறித்த மீனவரை தேடும் நடவடிக்கை தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
close