குடும்பத்தினரின் முன்னிலையில் சிறுமி கொடூர பலாத்காரம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி முனையில் தாய் மற்றும் சகோதரன் முன்னிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த புதன் கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் குறிப்பிட்ட 11 வயது சிறுமியின் வீட்டிற்குள் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் நுழைந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமியின் தாய் மற்றும் சிறுமியின் தம்பியை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர். இதனையடுத்து அந்த மூன்று பேரில் ஒருவன் அந்த 11 வயது சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர பலாத்கார செயலில் ஈடுபட்டது 36 வயதான ஜன்வர் சிங் என்ற நபர் என்பதும் அவருக்கு உடந்தையாக இருந்தது 25 வயதான ராஜூ மற்றும் 24 வயதான ரம்னிவாஸ் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் சிறுமியின் புகாரின் அடிப்படையில் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close