Trending News...

காரைநகரில் மோட்டார் சைக்கிள் விபத்து. சம்பவ இடத்திலேய இளைஞன் பலி.

காரைநகர் டிப்போவிற்கு அருகில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் மோட்டார் வாகனத்தில் வேகமாக சென்றதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.

வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட வேளை வேகக் கட்டுப்பாட்டினை இழந்த இளைஞன் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். தலைக்கவசம் அணியாததினால் விபத்துக்குள்ளாகிய நபர் மரணமடைந்துள்ளார்.