சரணடைந்த பின்னர் இசைப்பிரியாவை இழுத்து வந்து கொலை செய்தார்கள்...

மே 18 யுத்தம் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களில் ஊடகவியலாளர் இசைப் பிரியாவும் அடங்கும். அவரை முதலில் யார் என்று தெரியாமல் வவுனியா தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்ற, ராணுவத்தினர் அவரை அங்கே அடைத்து வைத்தார்கள். பின்னர் அவரை அடையாளம் கண்டு, கூட்டிச் சென்று ஒரு மறைவான இடத்தில் வைத்து சுட்டுக் கொன்று பின்னர் பிரேதத்தை எரித்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இவை அனைத்திற்க்கும் பொறுப்பாக இருந்தவர் ஜெகத் ஜெயசூடியா தான்.

இதனை முன் நாள் தளபதி சரத் பொன்சேகா ஒத்துகொண்டும் உள்ளார். அவர் இவ்விடையத்தை நேற்றையதினம் ஜாடைமாடையாக சொல்லியும் உள்ளார். வவுனியா முகாமில் சரணடைந்து அடைபட்டு இருந்த சில முக்கிய விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், இசைப்பிரியா போன்ற நபர்களை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்று. ஒரு இடத்தில் வைத்து அவர்களின் ஆடைகளை களற்றி செய்யக் கூடாத கொடுமைகளை செய்து. இறுதியில் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.

பின்னர் பிரேதங்களை எரித்து தடையங்களை அழித்துள்ளார்கள். வவுனியா முகாமில் இருந்து இவர்களை கூட்டிச் செல்லும் வேளையிலேயே தம்மை அவர்கள் கொல்ல தான் கூட்டிச் செல்கிறார்கள் என்ற விடையத்தை அனைவரும் அறிந்திருந்தார்கள். இந்த கோரச் சம்பவத்தினை நடத்தி முடித்தவர் ஜெகத் ஜெயசூரியா தான் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். கொல்லப்பட்ட அனைவரையும் அவர்கள் மோபைல் போனில் போட்டோ எடுத்தார்கள். ஏன் எனில் அதனை அவர்கள் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு காட்டவேண்டும் என்பதற்காக. இதில் ஒரு சில போட்டோக்கள் தான் கசிந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close