தேன் கூட்டுடன் விசித்திர வாகனம்!

தேன் கூட்டினை பின்னால் வைத்து கொண்டு மரக்கறி மற்றும் பழங்கள் கொண்டு செல்லும் ஜுப் வண்டி ஒன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காண முடிந்துள்ளது.

கல்கிரியாகம, கோரலயாகம பிரதேசத்தை சேர்ந்த லயனல் பண்டார என்பவரின் வாகனத்திலேயே தேனீக்கள் இவ்வாறு கூடு கட்டியுள்ளது.

அவரது வாகத்தின் மேலதிக டயரின் இரும்பு பகுதியில் இந்த தேன் கூடு உள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்த வாகனத்தில் மரக்கறி மற்றும் பாழங்கள் கொண்டு செல்லும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஜுப் வண்டியில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன.

அன்று முதல் இன்று இந்த தேனீக்களினால் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என பண்டார தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் நபர்களுக்கும் இந்த தேனீக்களினால் இதுவரையில் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close