'ஓவியா இருந்தால் பிக்பாஸ் வீட்டுக்குப் போவேன்...' சொல்வது பிரபல நடிகர்..

பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இப்போதும் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்ப்பார்ப்பது ஓவியாவைத்தான். அவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர மாட்டாரா என்று பலரும் ஏங்குகின்றனர்.

இந்த நிலையில் 'கதாநாயகன்' பட புரொமோஷனுக்காக அதில் நடித்த விஷ்ணு விஷால், கேத்தரின் தெரசா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றனர். இதுகுறித்து நடிகர் விஷ்ணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கூறியிருந்தார்.

அவருடைய அந்த ட்வீட்டிற்கு நடிகர் விக்ரம் பிரபு, 'கூல் ப்ரோ... ஆனால் மக்கள் தலைவி ஓவியா அங்கு இருந்தால் மட்டுமே நான் செல்வேன்' என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'நெருப்புடா' திரைப்படம் 'கதாநாயகன்' படம் வெளியான அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிப்பிட்டுத்தான் விக்ரம் பிரபு விஷ்ணுவுக்கு ரிப்ளை செய்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close