புலிகளின் தோல்விக்கான சில காரணங்கள்..-வைத்திய கலாநிதி பகீரதன்

தமிழ்த் தலைவர்கள் சிலரின் மறைவைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் தொடர்பாடல் இல்லாமல் போனதும் அவர்களுடைய போராட்டம் முடிவுக்கு வந்தமைக்கு காரணம் என வைத்திய கலாநிதி பகீரதன் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் பிரபாகரனின் தலைமைத்துவத்தை இந்தியா விரும்பவில்லை. அவருக்கு பதிலாக மாத்தையாவிடத்தில் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு முயற்சித்தனர்.

மேலும், கொரில்லா போர் முறையிலிருந்து மாறி, மரபியல் ரீதியான யுத்த முறைக்கு மாறியமையும் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமான சில விடயங்கள் எனவும் அறிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்து பிரபாகரனுக்கு நேரில் சென்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரபாகரன் சென்னையில் வைத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரபாகரன் டெல்லிக்கு சென்ற போது, தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஏனைய இயக்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு பிரபாகரனிடம் தெரிவித்திருந்தது.

இதனால் பிரபாகரன் கோபமடைந்தார். மேலும், பிரபாகரன் ஏக பிரதிநிதித்துவத்திற்கே அதிக கவனம் செலுத்தி இருந்தார். தங்களுடைய இயக்கத்தையே முன்னிலைப்படுத்தினார்கள் எனவும் பகீரதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close