தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்! விரைவில் அரசியல் பிரவேசம்?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்து தனது பாணியில் பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியில், போட்டியாளர்களிடையே பேசும் கமல் இன்று தமிழகத்துக்கு தனது பிரத்யேகமான பாஸையில் ஜோசியம் பார்த்து கூறினார்.

போட்டியாளர்கள் அனைவரும், பாகுபலியில் வரும் வில்லன் போல பேசிகாட்டினர். அதே பாணியில், கமல் தமிழகத்துக்கு ஜோசியம் கூறினார். மக்களுக்கு புரியாது என்பதால், இதை இந்த பாஸையில் கூறுவது தவறு. அதனால் மக்களுக்கு புரியும் வகையில் விரைவில் கூறுவேன் என தெரிவித்தார்.

நேரம் வரும்போது அனைவரும் மூளையை பயன்படுத்தி, விரலில் மை வைக்க வேண்டும் (வாக்களிக்க வேண்டும்) என்று கமல் பேசினார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close