Trending News...

வடமராட்சியில் தீப்பிடித்து எரிந்தது மதுபான நிலையம்! இன்று அதிகாலை சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீ விபத்தானது இன்றைய தினம் அதிகாலை மூன்று மணியளவில் ஏற்பட்டுள்ளதாச் சொல்லப்படுகிறது.

இந்தத் தீ விபத்து, தீ அணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்படுள்ளபோதிலும் குறிபிட்ட மதுபான விற்பனை நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறகபடுகின்றது.

தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லையாயினும், அந்த விற்பனை நிலையத்தில் மண்ணெண்னை கொள்ளளவி ஒன்று காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.