Loading... Please Wait.

நெல்லியடியில் இன்று காலை வாள்வெட்டு...

நெல்லியடி கப்பூது வீதியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து இந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரையும் வழி மறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

இதனால் நால்வரும் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஓன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் பயணித்த நால்வரும் அப்பகுதிக்கு வந்து, சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று கிளிநொச்சியிலும் வாள்வெட்டு சம்பவத்தினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
close