மீம் போடுபவர்கள் பற்றி கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம்வந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது முழுநேர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

தைராய்டு பிரச்சனை காரணமாக குரல் பாதிக்கப்பட்ட அவரின் தற்போதைய மேடை பேச்சுகள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. அது மட்டுமின்றி அவரை மையப்படுத்திய மீம்களும் அடிக்கடி அதிகம் வைரலாகின்றன.

இது பற்றி ஒரு பேட்டியில் கேட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள விஜயகாந்த், "நான் மீம்களை பார்ப்பதே இல்லை. மக்கள் என்னை புகழ்வதை ஏற்றுக்கொண்டால் இதையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். என் மகன்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகும் மீம் வீடியோகளை காட்டுவார்கள் - நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close