முகநூல் நிறுவனம் செலுத்தும் வரிப்பணம் எவ்வளவு தெரியுமா...?

2015ஐ விட முகநூல் பிரிட்டனுக்கு வரிப்பணமாக அதிக தொகை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2015 இல் 4.2மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை செலுத்தியிருந்த முகநூல் 2016இல் 5.1மில்லியன் பவுண்ட்ஸ் தொகையைச் செலுத்தி உள்ளதாக அறியப்படுகிறது.

2016இல் தன்னுடைய அயர்லாந்து அலுவலகத்தை விட, பிரிட்டன் அலுவலகத்திலிருந்து அதிக தொகை பதிவுகளை விளம்பரத்துக்காக முகநூல் பெற ஆரம்பித்திருந்தது .

இந்தக் காரணத்தால் இதன் வருமானம் பெரிய அளவில் அதிகரித்திருந்தது . தொழில் நுட்ப இராட்சத நிறுவனங்களான அமேசன் , அப்பிள் ஆகியன ஐரோப்பாவில் தாம் செய்திருந்த ஒழுங்கு முறைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில், முகநூலின் 2016ம் ஆண்டுக்கான வரித் தொகை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வேகமான வளர்ச்சி காணும் நிறுவனமாக இருந்தும் , 2014 இல் 4,327 பவுண்ட்ஸ் தொகை மாத்திரம் வரித்தொகையாக முகநூல் கட்டி இருப்பது அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது

இதன் காரணமாகவே திசை மாற்றப்பட்ட வருமான வரி என்ற புது வரியை அரசு அறிமுகப்படுத்தி , கூட்டுத்தாபன வரியையும் உயர்த்தி , வருமானம் வெளி நாடுகளுக்கு போகாதிருக்க திட்டமொன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இதன் காரணமாகவே முகநூல் இப்பொழுது பெரிய தொகை கட்டும் நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close