ஓடும் பஸ்சில் ஏறிய மாணவனுக்கு நிகழ்ந்த கொடூர விபத்து!!

சென்னை கொடுங்கையூர், காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. டிரைவர். இவருடைய மகன் திலக்ராஜ் (வயது 16). சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து பாரிமுனையில் இருந்து மணலி சென்ற மாநகர பஸ்சில்(தடம் எண்: 64சி) ஏறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வியாசர்பாடி கணேசபுரம் அருகே சென்றபோது படிக்கட்டில் நின்ற திலக்ராஜ் திடீரென ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார்.

அப்போது பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து ஏற்பட்டவுடன் அந்த மாநகர பஸ் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close