உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சற்றுமுன்னர் மாத்தளை ஆற்றில் குளித்த 10 பேரை காணவில்லை!

மாத்தளை – லக்கலை, தெல்கமு ஓயா ஆற்றில் குளிக்க சென்ற சுமார் 10 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இன்று மதியம் வான் ஒன்றில் வந்த இவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகளில் கடற்படை சுழியோடிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.