உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சு.ப தமிழ்செல்வன் அவர்களின் 10ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களின்

10ஆவது நினைவு வணக்க நிகழ்வு இன்று அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இன்று மதியம் 1 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள st, andrew's church, 89, malvern avnue harrow, HA2 9ER என்ற இடத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வில் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் மற்றும் லெப் கேனல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலைச்செல்வன், மேஜர் செல்லத்தம்பி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோருக்கு 10ஆவது நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு அஞ்சலியும் அனுட்டிக்கப்பட்டது.

தாயகப் பாடல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவரகளுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர் சுடர் அவரகள் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களைப் பற்றிய நினைவுரை ஒன்றினை ஆற்றினார்.

மேலும் பிரித்தானிய தமிழ் புலம்பெயர் இளையோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெரும் அளவிலான மக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.