உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் கண­வன் உயி­ரி­ழந்த 12 மணித்­தி­யா­லங்களில் மனை­வி­ மரணம்!

கண­வ­ன் உயி­ரி­ழந்து 12 ஆவது மணித்­தி­யா­லத்­தில் மனை­வி­யும் உயி­ரி­ழந்த சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் சுண்­டுக்­கு­ழி­யில் இடம்­பெற்­றது.

இதே இடத்­தைச் சேர்ந்த சிவக்­கொ­ழுந்து இரா­ஜேஸ்­வ­ரன் (வயது–90),அவ­ரது மனைவி திரு­மதி செல்வ பாக்­கி­யம் இரா­ஜேஸ்­வ­ரன் (வயது–83) ஆகி­யோரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

“இரா­ஜேஸ்­வ­ரன் இரு­தய நோயால் கடந்த மாதம் இடைக்­கி­டையே மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுச் சிகிச்சை பெற்று வந்­துள்­ளார்.

அவ­ரின் உடல் நிலை மோச­மா­கிய நிலை­யில் தான் தனது வீட்­டில் உயிரை விட ஆசைப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்து மீண்­டும் வீட்­டுக்­குச் சென்­றுள்­ளார்.

அவ­ரின் உடல்­நிலை மோச­ ம­டை­வதை அவ­தா­னித்த அவ­ரது மனைவி மன­த­ள­வில் பெரி­தும் பாதிப்­புக்கு உள்­ளாகி இருந்­தார்.

கடந்த 26 ஆம் திகதி மாலை செவ்­வாய்­க்கி­ழமை இரா­ஜேஸ்­வ­ரனுக்கு மூன்­றா­வது தட­வை­யாக மார­டைப்பு வந்­துள்­ளது. செல்­வ­பாக்­கி­யத்­துக்­கும் முத­லா­வது தட­வை­யாக மார­டைப்பு வந்­துள்­ளது.

ஆகவே இவர்­கள் இரு­வ­ரை­யும் உற­வி­னர்­கள் நோயா­ளர் காவு வண்டி மூலம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­துவ மனை­யில் சேர்த்­த­னர்.

கடந்த 31ஆம் திகதி கண­வன் முற்­ப­கல் 11மணிக்கு உயி­ரி­ழந்­தார். மனை­வி­ அன்­றி­ரவு 11 மணிக்கு உயி­ரி­ழந்­தார்” என்று அவ­ரது உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.